modi and OPS

தமிழகத்திற்கு ஓ.பன்னீர்செல்வத்தின் கூட்டாளியான மோடியும், பாரதிய ஜனதா கட்சியும் தொடர்ந்து இழைத்து வரும் துரோகப் பட்டியல்:

1. நெடுவாசல் மக்களின் போராட்டத்தின் போது அளித்த உறுதி மொழியை மீறி, அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், ஹைட்ரோன் கார்பன் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக மோடி அரசு இன்று (27.03.17) ஒப்பந்தம் கையெழுத்து.

2. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற ஒட்டு மொத்த தமிழக மக்களின் கோரிக்கை ஏற்கமல், கிராமப்புற மாணவர்களின் முன்னேற்றத்தை தடை செய்துள்ளது மோடி அரசு.

3. நதி நீர் இணைப்பு, காவிரி மேலாண் வாரியம், வறட்சி நிவாரணம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 2 வாரங்களுக்கு மேலாக தமிழக விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தியும் அவர்களை சந்திக்காமல் அலட்சியம் செய்யும் மோடி அரசு.

4. உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டபோது, அதை ஏற்க மறுத்து தமிழகத்திற்கு வரலாற்றுத் துரோகம் இழைத்து விட்ட மோடி அரசு.

5. தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று கூறி, அப்பிரச்சனையில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ராமேஸ்வரம் மீனவர்களின் பாரம்பரிய உரிமையை அடகு வைத்து விட்டது மோடி அரசு.

6. வறட்சி நிவாரணமாக தமிழக அரசு சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாயை கோரியிருந்த நிலையில், வெறும் ஆயிரத்து 748 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழகத்தை ஏமாற்றிய மோடி அரசு